• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விடத்தல் தீவு இயற்கை ஒதுக்கத்தின் எல்லைகளை திருத்தி மீள வௌிப்படுத்துதல்
- 2016-03-01 ஆம் திகதியிடப்பட்டதும் 1956/13 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இயற்கை ஒதுக்கமொன்றாக வௌிப்படுத்தப்பட்டுள்ள 29,180 ஹெக்டயார் பூமி பிரதேசத்தைக் கொண்ட விடத்தல் தீவு இயற்கை ஒதுக்கமானது இலங்கையில் அமைந்துள்ள மிக முக்கியமான சதுப்புநில படர் தாவரத்துடனான இயற்கை ஈரவலயப் பிரதேசமொன்றாகும். நாட்டின் மீன் உற்பத்தி ஏற்றுமதி வருமானத்தை 2020 ஆம் ஆண்டளவில் 1.3 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ள பல்வேறுபட்ட கருத்திட்டங் களிலிருந்து மன்னார் மாவட்டத்தின் மாந்தை - மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் "நீர்வாழ் உயிரின வளர்ப்பு பேட்டை" ஒன்றை தாபிக்கும் கருத்திட்டம் முக்கியமானதாகும். இந்த கருத்திட்டத்திற்குப் பொருத்தமென இனங்காணப்பட்டுள்ள 1,491 ஹெக்டயார் பூமி பிரதேசமானது விடத்தல் தீவு இயற்கை ஒதுக்கத்தினுள் அமைந்துள்ளதன் காரணமாக இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது கடினமாயுள்ளது.

இதற்கமைவாக, முறையான சுற்றாடல் பாதிப்பு பற்றிய ஆய்வொன்றை மேற்கொண்டு அதன் பெறுபேற்றின் கீழும் வனவுயிர் மற்றும் விருட்சங்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாகவும் உத்தேச நீர்வாழ் உயிரின வளர்ப்பு பேட்டையை தாபிக்கும் பொருட்டு இனங்காணப்பட்டுள்ள நிலப்பிரதேசத்தை விடத்தல் தீவு இயற்கை ஒதுக்கத்தின் எல்லையிலிருந்து நீ்க்கி இந்த ஒதுக்கத்தின் எல்லைகளை மீள வௌிப்படுத்தும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினாலும் கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.