• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு கரையோரமாக வண்டல் / மணல் படிவு இடம்பெயர்தல் (Long shore Sediment Transport LST) தொடர்புபட்ட ஆய்வு
- கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டை வரை செல்லும் சுமார் 370கிலோ மீற்றர் நீளமான இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு கரையோரம் சுற்றுலா தொழிலின் மூலம் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் வருமானத்தில் 75 சதவீதத்தையும் கடற்றொழிலிருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தில் 50 சதவீதத்தையும் பிறப்பிக்கும் மிக முக்கியமான பொருளாதார வலையமொன்றாகும். தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக்கு உட்பட்ட இந்த கரையோரம் சீரற்ற கால நிலைமையின் காரணமாக உருவாகும் திடீர் அரிப்புகளுக்கும் நீண்டகால அழிவுகளுக்கும் ஆளாகும். அதே போன்று சுற்றுலா தொழிலின் விருத்தியுடன் துரிதமாக அபிவிருத்தி அடைந்துவரும் இலங்கையின் கிழக்கு கரையோரமும் புயல், சூறாவளி மற்றும் நீண்டகால கடலரிப்பு போன்ற அனர்த்த நிலைமைகளுக்கு ஆளாகும் சாத்தியமும் காணப்படுகின்றன்.

இந்த கரையோரங்களுக்கு அண்மையில் நிகழும் கடலரிப்பு பாரிய பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளுக்கு காரணமாய் அமைந்துள்ளன. அதே போன்று கடல் மட்டம் உயரும் ஆபத்தும் கடலரிப்பினை விரைவுபடுத்தும் ஏனைய இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களும் அவற்றின் தீவிரமும் அதிகரிக்கின்றமையை காட்டுகின்றமையினால் இதன் மூலம் பாதிக்கப்படும் கரையோரங்களுக்கு அண்மையில் வசிக்கும் மக்களும் அவற்றுக்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் அபாயகரமான நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளன. ஆதலால், இலங்கையில் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு கரையோரங்களை பயனுள்ள வகையில் முகாமிக்கும் திறமுறைகளை தயாரிக்கும் பொருட்டு கரையோர அரிப்புக்கு முக்கிய காரணமாய் அமையும் கரையோரத்தின் ஊடாக வண்டல் / மணல் படிவு இடம்பெயர்தல் (Long shore Sediment Transport LST) வேகம் தொடர்பில் கணக்கிடும் ஆய்வொன்றை செய்யும் பொருட்டும் தேவையான நிதியினை வழங்குவதற்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.