• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வனப் பாதுகாப்பு திணைக்களத்தினதும் வன சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினதும் வௌிக்கள பணிகளுக்கான வசதிகளை ஏற்பாடு செய்தல்
- நாட்டின் பல்வேறுபட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள தெரிவு செய்யப்பட்ட நுண்ணுனர்வுமிக்க சுற்றாடல் முறைமைகள் சிலவற்றை பாதுகாத்தல் மற்றும் இந்த சுற்றாடல் முறைமைகளை நிலையாக முகாமிப்பதன் மூலம் அதற்கண்மித்து வசிக்கும் சமூகத்தினருக்கு நலன்களை வழங்கும் நோக்கில் சர்வதேச அபிவிருத்தி சமவாயத்தின் ஒத்துழைப்புடன் "சுற்றாடல் முறைமை பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ கருத்திட்டம்" நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் சிங்கராஜா , நகல்ஸ், கண்ணௌிய மற்றும் ஹுருலு போன்ற ஒதுக்கங்களுக்கும் யால - லுணுகம்வெஹெர, பூந்தல, உடவலவ, கல்ஓயா ஆகிய தேசிய பூங்காக்களுக்கும் அண்மையில் வசிக்கும் மக்களினதும் பங்களிப்புடன் பாதுகாக்கப்படும்.

அதற்கமைவாக, இந்த கருத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவதற்கு வனப் பாதுகாப்பு திணைக்களத்தினதும் வன சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினதும் நிலைபேறுடைய அபிவிருத்தி செயலகத்தினதும் நிறுவன ரீதியிலான ஆற்றலை விருத்தி செய்யும் நோக்கில் இந்த நிறுவனங்களின் வௌிக்கள பணிகளுக்கு தேவையான வாகனங்களை கொள்வனவு செய்யும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.