• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 செப்தெம்பர் 01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக சில பொலித்தீன் வகைகளின் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனையை தடை செய்யும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதல்
- சில பொலித்தீன் வகைகளின் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனையை 2017 செப்தெம்பர் 01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக தடை செய்வதற்கு அமைச்சரவையினால் 2017‑07‑11 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட தீர்மானத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த தடையினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்படும் பொலித்தீன் உற்பத்தியாளர்கள் பொலித்தீன் சார்ந்த பொதியிடல் தொழிற்சாலைகளில் ஈடுபடுபவர்கள் உட்பட பொலித்தீன் மொத்த வியாபாரிகள் ஆகியோர்களை பொலித்தீன் தொடர்புபட்ட மாற்று வழிகளுக்கு படிப்படியாக ஈடுபடுத்துவது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உரிய நிறுவனங்களின் உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.