• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிலவும் வரட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதலும் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தலும்
- நிலவும் வரட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பில் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கத்தினால் ஏற்கனவே பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதெனவும் இந்த நிவாரண பணிகளை எதிர்வரும் இரண்டு (02) மாத காலப்பகுதியிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட குறிப்பானது அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது:

* பாதிக்கப்பட்ட 20 மாவட்டங்களில் 117 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 240,338 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்குதல்.

* வரட்சி நிவாரணமாக மாதமொன்றுக்கு 5,000/- ரூபா பெறுமதி மிக்க உலர் உணவு பொதியொன்றை வழங்குதல்.

* வனவிலங்குகளுக்கு நீர் வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்.

* நிதி கஷ்டத்திற்கு முகங்கொடுத்துள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு மாவட்ட செயலாளர்களின் ஊடாக முற்பணங்களை வழங்குதல்.