• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாடசாலை மாணவர்களுக்காக ஒன்றிணைந்த சுகாதார காப்புறுதி காப்பீடொன்றை வழங்குதல்
- 05 தொடக்கம் 19 வயது வரையிலான 4.5 மில்லியன் கொண்ட நாட்டின் அனைத்து பாடசாலை மாணவர்கள் சார்பில் 200,000/- ரூபாவைக் கொண்ட காப்புறுதி காப்பீடொன்று வீதம் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்து வதற்கு 2017 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் 2,700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தேச காப்புறுதி காப்பீட்டின் மூலம் வௌிநோயாளர் சிகிச்சைக்காக 10,000/- ரூபாவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் 100,000/- ரூபாவும் இதன் மூலம் காப்பீடு செய்யப்படும். இதற்கு மேலதிகமாக பாடசாலை மாணவர் ஒருவரின் திடீர் மரணமொன்றின் போது பெற்றோருக்கு 100,000/- ரூபாவும் மாணவர் ஒருவரின் தாய் அல்லது தந்தையின் திடீர் மரணமொன்றின் போது குறித்த மாணவருக்கு 75,000/- ரூபாவும் இந்த காப்புறுதியின் மூலம் செலுத்தப்படும். அத்துடன் பாடசாலை மாணவர் ஒருவர் முழுமையான இயலாமைக்கு உள்ளாகும் சந்தர்ப்பத்தில் 100,000/- ரூபாவையும் பகுதி இயலாமைக்கு ஆளாகும் போது 50,000/- ரூபாவிலிருந்து 100,000/- ரூபா வரையும் இதன்கீழ் நட்டஈடாக பெற்றுக் கொள்ளமுடியும்.

இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 2,348 மில்லியன் ரூபாவைக் கொண்ட வருடாந்த தவணையின் கீழ் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் மூலம் இந்த காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.