• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தின் 01 ஆம் இலக்க பயணிகள் அந்தலையில் தீர்வை விலக்களிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களை கொண்டு நடாத்துதல் (Operation of Core Category Duty Free Shops)
- கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தின் 01 ஆம் இலக்க பயணிகள் அந்தலையில் வருகைதரும் வௌியேறும் மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முதல்தர தீர்வை விலக்களிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நடாத்திச் செல்வதற்கான (Operation of Core Category Duty Free Shops) இரண்டாவது ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் சுவிற்சலாந்தின் Dufry AG நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.