• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெலிசர கடற்படைத் தொகுதியில் அமைந்துள்ள கடற்படை பொது வைத்தியசாலையின் (கொழும்பு) கூரையின் மீது சூரிய சக்தி முறைமையொன்றை நிறுவுதல்
- கடற்படைக்குச் சொந்தமான முக்கிய வைத்தியசாலையானது வெலிசர கடற்படைத் தொகுதியில் அமைந்துள்ள 200 படுக்கைகளைக் கொண்ட வைத்தியசாலையாகும். இந்த வைத்தியசாலையை நடாத்திச் செல்லும் போது மின்சாரத்திற்காக செலவாகும் அதிக செலவினைக் குறைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த வைத்தியசாலையின் கூரையின் மீது தேசிய மின்சார முறைமையுடன் இணைக்கும் 450 கி.வோ சூரிய சக்தி முறைமையொன்றை நிறுவும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.