• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராமத்தில் மீள குடியமர்த்துவதற்காக காணிகளை விடுவித்துக் கொள்ளல்
- வடக்கு மற்று கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல் நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த மக்களை அவர்களுடைய கிராமங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. முன்னர் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் தாபிக்கப்பட்டிருந்த அதன் முகாம்களை வேறு இடங்களில் தாபிப்பதன் மூலம் பாதுகாப்பு படைகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. இதற்கமைவாக, பாதுகாப்பு படைகளின் கட்டுக்காப்பிலிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராமத்தில் 432 ஏக்கர் தனியார் காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 111 ஏக்கர் தனியார் காணிகள் இடம்பெயர்ந்தவர்கள் மீளக் குடியமரும் நோக்கத்திற்காக விடுவிப்பதற்கு இராணுவத் தளபதி உடன்பாடு தெரிவித்துள்ளார். குறித்த காணிகளை விடுவித்துக் கொள்வதற்காக இவற்றுள் அமைந்துள்ள இராணுவ முகாம்களை வேறு இடங்களுக்கு இடம் நகர்த்தும் பொருட்டு தேவையான நிதிகளை குறித்தொதுக்கிக் கொள்வதற்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.