• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஶ்ரீ தலதா மாளிகையின் தங்கக் கூரையின் திருத்த வேலைகள்
- ஶ்ரீ தலதா மாளிகைக்கு உரிய மதிப்பளித்து 1987 ஆம் ஆண்டில் முன்னாள் சனாதிபதியான ஆர் பிரேமதாசா அவர்களினால் செய்யப்பட்ட காணிக்கையொன்றான தங்கக்கூரையானது 2002 ஆம் ஆண்டில் தங்க தகடு பதித்து புனரமைக்கப்பட்டதுடன் அது தற்போது நிறம் மங்கி மேலதிக புனரமைப்பை செய்யவேண்டியுள்ளது. அதற்கிணங்க, அதிமேதகைய சனாதிபதி அவர்களின் செலவினத் தலைப்பின் கீழ் 2017 ஆம் ஆண்டு சார்பில் குறித்தொதுக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்ட ஏற்பாட்டினைப் பயன்படுத்தி 44.89 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவினை தங்க கூரையினை புனரமைப்பதற்கென பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் புத்தசாசன அமைச்சரான (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்பை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.