• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குழந்தைக்கான திட்டமிடல் - குறைவான கருவளத்திற்கான விழிப்பணர்வு நிகழ்ச்சித்திட்டம்
- சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சில் காணப்படும் தகவல்களுக்கு இணங்க, 15 சதவீதத்திற்கும் கூடுதலான தம்பதிகள் குறைவான கருவளத்தினால் இன்னலுக்கு உள்ளாவதுடன் சில சந்தர்ப்பங்களில் இச்சூழ்நிலையானது உள ரீதியான மற்றும் வாழ்க்கை நெருக்கடியொன்றை விளைவிக்கின்றது. இலங்கையானது அபிவிருத்தியடைந்த நாடுகளின் மட்டத்திற்கு நெருக்கமாக பேறுசார்ந்த மற்றும் குழந்தை பராமரிப்பு சுகாதார சேவை சுட்டிகளை அடைந்திருந்த போதிலும், குறைவான கருவளர்ச்சி முகாமைத்துவம் மீது செலுத்தப்படும் கவனமானது மிகப் போதுமானதாகவில்லையென்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆதலால், குறைவான கருவளத்தினால் இன்னலுக்கு உள்ளாகும் தம்பதிகளுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனை, முறையான வழிகாட்டல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் முன்கூட்டிய குறிப்பீடு போன்ற வசதிகளானவை அரசாங்க சுகாதார பராமரிப்பு சேவைகளுக்குள் தாபிக்கப்படவேண்டியுள்ளன. அதற்கிணங்க, குறைவான கருவள பிரச்சினை மீது பொதுமக்களினதும் அததேபோன்று சுகாதார பாதுகாப்பு பணியாளர்களினதும் கவனத்தினைச் செலுத்தி, குழந்தைக்கான திட்டமிடல் தொனிப்பொருளின் கீழ் 2017 செப்தெம்பர் மாதம் 26 ஆம் திகதி வருகின்ற தேசிய குடும்பத் திட்டமிடல் தினத்தை நினைவுகூரும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.