• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிரதங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பொதிகள் கொண்டு செல்லல் தொடர்புபட்ட கட்டணத்தை திருத்துதல்
- புகையிரத திணைக்களத்தின் மூலம் பொதிகள் கொண்டு செல்லப்படும் கட்டணங்களானவை கடந்த ஒன்பது (09) வருட காலப்பகுதியில் திருத்தத்திற்கு உட்பட்டிருக்கவில்லையென்பதுடன், பொதிகள் கொண்டு செல்லப்படுவதற்காக ஏனைய தரப்பினர்கள் மூலம் அறவிடப்படும் கட்டணங்களுடன் ஒப்பிடும் போது இந்த திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் அதற்கான கட்டணங்களானவை மிகக்குறைவானதாகும். ஆதலால், பொதுமக்களுக்கு மேலதிக சுமையினை ஏற்படுத்தாமல், வர்த்தகம் சாராத மற்றும் நுகர்வு நோக்கங்களுக்கான பொதிகளுக்கான கட்டணங்களைவிட ஏனைய பொதி போக்குவரத்துக்கான தற்போதய கட்டணங்களை 50 சதவீதத்தினால் அதிகரிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.