• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பயணிகள் போக்குவரத்துக்கான பேரூந்து கட்டண கொள்கையை நடைமுறைக்கு ஏற்ற வகையில் மீளமைத்தல்
- வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கென தற்போது பின்பற்றப்படும் கொள்கையானது 2002 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதொன்றாகும். ஆதலால், அதேபோன்று புதிய தகுதிவிதிகளை உள்ளடக்கி தற்கால சமூக மற்றும் பொருளாதார போக்குகளுடன் இசைவாகும் பொருட்டு இந்நோக்கத்திற்கென புதிய கொள்கையொன்றை வகுத்தமைப்பதற்கான தேவையானது தற்போது எழுந்துள்ளது. அதற்கிணங்க, பேருந்து உரிமையாளர் சங்கங்களுடனும் பேருந்து பயணிகள் சங்கங்களுடனும் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் பின்னர், பேருந்து கட்டணங்களின் திருத்தம் கருதி பயன்படுத்தப்படவுள்ள புதிய கொள்கையொன்றினை வகுத்தமைப்பதற்கென உரிய நிறுவனங்களின் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய நிபுணர் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.