• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பயணிகள் போக்குவரத்திற்காக ஈடுபடுத்தியுள்ள முச்சக்கரவண்டிகள் மற்றும் பாடசாலை மாணவர்களை கொண்டு செல்கின்ற வான்களினது சேவையின் தரத்தை மேம்படுத்துதல்
- அறிக்கையிடப்பட்டவாறு, மோட்டார் போக்குவரத்து திணைக்கள அறிக்கைகளுக்கு இணங்க, 2016 ஆம் ஆண்டு இறுதியில் நாட்டில் பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்துக்கு மேலாக இருப்பதுடன் மாணவர்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் பாடசாலை வான்களின் எண்ணிக்கையானது 30,000 இற்கு மேற்பட்டும் உள்ளது. ஒழுங்கற்ற விதத்திலும் முறையான ஒழுங்குறுத்தல் முறைமையின்றியும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பயணிகள் போக்குவரத்திற்காக ஈடுபடுத்தியுள்ள முச்சக்கரவண்டிகள் மற்றும் பாடசாலை மாணவர்களை கொண்டு செல்கின்ற வான்களினது சேவையின் தரநிலையினை மேம்படுத்தும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த விடயம் சம்பந்தமாக பின்பற்றப்படவுள்ள வழிமுறைக்கென சிபாரிசுகளை மேற்கொள்ளும் பொருட்டு நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவின் சிபாரிசுகளுக்கு இணங்க பின்வரும் நடவடிக்கைகளை பின்பற்றும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு ஏற்ப மாகாண சபையின் விடயநோக்கெல்லைக்குள் ஒரு விடயப்பொருளாக இவ்விடயத்தினைக் கவனத்திற்கொண்டு எடுக்கப்படவுள்ள நடவடிக்கை.

* இரு போக்குவரத்து சேவைகளினதும் சேவை தரநிலையை மேம்படுத்துவதற்குத் தேவையான குறைந்தபட்ச நியமங்களை உள்ளடக்கிய அறிவுறுத்தல்களையும் விதிகள் மற்றும் ஒழுங்குவிதி தொகுப்பையும் தயாரிக்கும் பொருட்டு அவசியமான தொழினுட்ப உதவியினை வழங்குவதற்கென தேசிய தொழினுட்ப குழுவொன்றைத் தாபித்தல்.

* பொது போக்குவரத்து தொடர்பில் அரசாங்கத்தின் நீண்டகால கொள்கையாக, பாதுகாப்பு குறைவான போக்குவரத்து முறையொன்றாக கருதப்படும் முச்சக்கரவண்டிச் சேவையினை ஊக்கமிழக்கச் செய்து பாதுகாப்பான போக்குவரத்திற்காக வாடகை மோட்டார் வண்டிச் (Taxi) சேவையின் பயன்பாட்டினை ஊக்கப்படுத்துவதற்கான முறைமையொன்றினைப் பின்பற்றுதல்.