• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
செல்லிடத்தொலைபேசி அடையாள சிம் அட்டைகளை உரிய முறையில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைமுறை
- சிம் அட்டைகளை கொள்வனவு செய்யும் போது, சிம் அட்டையின் உரிமையாளரின் சரியான தகவலை உள்ளடக்கிய முறையான ஆவணப்படுத்தலின்றி பெருமளவு எண்ணிக்கை கொண்ட செயற்பாட்டிலுள்ள இணைப்புக்களானவை செல்லிடத் தொலைபேசிகளை வழங்கும் கம்பனி வலையமைப்புக்களில் தற்போது காணப்படுகின்றனவென்பது அவதானிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கினை கரிசனையில் கொண்டு, செல்லிடத் தொலைபேசியின் பாவனையின் மூலம் புரியப்படும் பல்வேறுபட்ட குற்றங்கள் மற்றும் மோசடி செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, சட்டரீதியான சந்தாதாரரை இனங்காண்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான தகவல்களுடன்கூடிய செல்லிடத்தொலைபேசி சந்தாதாரர்களை பதிவு செய்வது அத்தியாவசி யமானதாகும். சிம் அட்டையை பயன்படுத்தும் ஆளின் அவசியமான ஏனைய ஆவணங்களை உள்ளடக்கி உரியவாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவ மொன்றையும் தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்றையும் பெற்றுக்கொண்ட பின்னர் சிம் அட்டைகளை பதிவு செய்யும் நடைமுறைகளை பின்பற்றுமாறு செல்லிடத்தொலைபேசிகளை வழங்கும் செல்லிடத்தொலைபேசி கம்பனிகளுக்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவானது ஏற்கனவே கோரிக்கையொன்றை விடுத்துள்ளது. ஆதலினால், உரிய விதத்தில் பதிவு நடைமுறையினை நடைமுறைப்படுத்து வதற்கென 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தின் கீழ் கட்டளையொன்றை வௌியிடும் பொருட்டும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கென இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கும் பொருட்டும் இவ்விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரான அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.