• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீதொட்டமுல்ல திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தின் காரணமாக அந்த இடத்திலிருந்து வௌியேற்றப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு 50,000/- ரூபாவைக் கொண்ட கொடுப்பனவொன்றை வழங்குதல்
- 2017‑04‑14 ஆம் திகதியன்று கொலன்னாவையிலுள்ள மீதொட்டமுல்ல திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தின் காரணமாக, தாம் வசிக்கும் வீடுகளை இழந்த குடும்பங்களும் மற்றும் புதையும் அபாயத்தை எதிர்நோக்கிய தாம் வசிக்கும் வீடுகளில் இருந்த குடும்பங்களும் அவற்றின் வதிவிடங்களிலிருந்து அகற்றப்பட்டதுடன் இதுவரை, அவற்றில் 91 குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 60 குடும்பங்கள் வழங்கப்பட்ட மாற்று வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு உடன்பட்டுள்ளார்கள். அதற்கிணங்க இவ்வனர்த்தம் காரணமாக இன்றுவரை இடம் பெயர்ந்த மேற்போந்த 60 குடும்பங்கள் உள்ளடங்கலாக 141 குடும்பங்களுக்காக 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கென 50,000/- ரூபாவைக் கொண்ட வீட்டு வாடகைப் படியினை செலுத்தும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.