• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
துறைமுக அணுகுகை நிலமட்டத்திற்கு மேலான அதிவேக நெடுஞ்சாலைக் கருத்திட்டம் - இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கு பதினேழு மாடிகளைக் கொண்ட புதிய அலுவலகக் கட்டடமொன்றையும் நான்கு பட்டறைகளையும் நிருமாணித்தல்
- பிரேரிக்கப்பட்ட துறைமுக அணுகுகை நிலமட்டத்திற்கு மேலான நெடுஞ்சாலைக் கருத்திட்டமானது 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்கப்படுவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கைத் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான கட்டடங்கள் மற்றும் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் வசதிகள் அமைந்துள்ள பிரிவு ஆகியவற்றுக்கு குறுக்காகச் செல்லும் அணுகுகை வீதியானது 2018 ஆம் ஆண்டு திசெம்பர் மாதமளவில் ஆரம்பிக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தின் அமுலாக்கம் காரணமாக அகற்றப்படுவதற்கு தேவைப்படுத்தப்பட்ட இலங்கை துறைமுக அதிகாரசபை கட்டடங்களுக்குப் பதிலாக, பதினேழு மாடிகளைக் கொண்ட புதிய அலுவலகக் கட்டடம் ஒன்றும் நான்கு பட்டறைகளும் நிருமாணிக்கப்படுவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. ஆதலால், தாமதமெதுவுமின்றி நிருமாண வேலையினை ஆரம்பிக்கும் நோக்குடன், மதியுரைச் சேவைகளை வழங்குவதற்காக மத்திய பொறியியல் உசாத்துணை பணியத்திடமிருந்து பிரேரிப்புக்களை கோரும் பொருட்டும் அதனை மதிப்பிட்டு ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டும் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.