• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தை திருத்துதல்
- இலங்கையில் நீர்வாழ் உயிரின வளர்ப்பினை மேம்படுத்துவதையும் ஒழுங்குறுத்துவதையும் அடிப்படை நோக்கமாகக் கொண்டு 1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது தாபிக்கப்பட்டுள்ளது. நீர்வாழ் உயிரின வளர்ப்பினை இலங்கையில் வர்த்தக மட்டத்தில் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதோடு, இதற்கு ஒருங்கிணைவாக இந்த பணிகளை ஒழுங்குறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் முகாமிப்பதற்கும் பலம்மிக்க சட்ட கட்டமைப்பொன்று இருப்பது இந்த கைத்தொழிலின் நிலைபேறுடைய தன்மைக்கு அத்தியாவசியமானதாகும். அதேபோன்று நீர்வாழ் உயிரின வளர்ப்பினை முகாமிக்கும் போது இனங்காணப்பட்டுள்ள குற்றங்கள் உட்பட இந்த குற்றங்களுக்கு தண்டனை விதிப்பதற்கும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்குத் தேவையான உயிரின வகைகள், பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இறக்குமதி செய்தல், தொழிற்பாட்டு பணிகளுக்குரியதாக உரிமப்பத்திரங்களை வழங்குதல் போன்ற பணிகள் சார்பிலும் தேவையான ஏற்பாடுகளை சட்டத்தில் சேர்க்க வேண்டியுள்ளது.

இதற்கமைவாக தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு தேவையான அதிகாரங்களை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிக்கும் விதத்தில் 1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க, இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தை திருத்துவதற்கும் இது சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து பிரேரிப்புகளையும் சிபாரிசுகளையும் சமர்ப்பிக்கும் பொருட்டு குழுவொன்றை நியமிப்பதற்குமாக கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.