• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோட்டார் வாகன சட்டத்தை திருத்துதல்
- நாளுக்குநாள் அதிகரித்துவரும் வாகன விபத்துக்களை குறைத்து வீதி பாதுகாப்பினை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கமைவாக, உத்தேச "சாரதிகளுக்கான தகுதியீனத்திற்கான புள்ளி முறையை" நடைமுறை ரீதியில் செயற்படுத்தும் அதிகாரம் நீதவான்களுக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் கையளித்தல். அபாயகர இரசாயன பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், அவசர சேவை வாகனங்கள் மற்றும் பொது சேவை வாகனங்கள் போன்றவற்றை செலுத்தும் சாரதிகளிடம் இருக்க வேண்டிய விசேட தகைமைகளை வௌிப்படுத்துதல், மோட்டார் வாகனங்களுக்குரிய வேகக்கட்டுப்பாட்டினை ஒழுங்குறுத்துதல், குறித்த அந்த இடத்திலேயே தண்டப்பணம் செலுத்துவதற்கு மின்னணு தொழினுட்ப முறையினை அறிமுகப்படுத்துதல், வலது குறைந்தோரினால் பயன்படுத்தப்படும் வாகனங்கள் அடங்கலாக விசேட வாகன வகைகளை பதிவு செய்வதற்கு புதிய வாகன வகுப்புகளை அறிதமுகப்படுத்துதல், மோட்டார் வாகன சட்டத்தில் வௌிப்படுத்தப்படாத குற்றங்களுக்கு ஏற்புடைத்தாக்கப்படும் பொது தண்டனையைத் திருத்துதல் போன்ற மோட்டார் வாகன சட்டத்திற்கு நடைமுறை ரீதியில் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக இந்த சட்டத்திலுள்ள உரிய பிரிவுகளையும் II ஆம் அட்டவணையையும் திருத்தும் பொருட்டு சட்டவரைநரினால் தயாரிக்கப் பட்டுள்ள சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.