• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலை அமைந்துள்ள மனையிடத்திலுள்ள கட்டடங்கள், பொருட்கள் மற்றும் இயந்திர சாதனங்களை அப்புறப்படுத்துதல்
- இற்றைக்கு 23 ஆண்டு காலமாக மூடப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட கந்தளாய் சீனி கைத்தொழிற் சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை அரசாங்க - தனியார் கூட்டு தொழில்முயற்சியின் கீழ் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக உரிய தொழிற்சாலை மனயைிடத்தை விடுவிப்பதற்கு முன்னர் அங்குள்ள அகற்றப்படக் கூடிய சகல கட்டடங்களையும் உடைத்து அப்புறப்படுத்துவதற்கும் பொருட்கள் மற்றும் இயந்திர சாதனங்களை விற்பனை செய்வதற்குமாக விலைகோரப்பட்டுள்ளதோடு, அதற்காக 540 மில்லியன் ரூபாவைக் கொண்ட ஆகக்கூடிய விலைமுன்வைப்பினை செய்துள்ள கேள்விதாரருக்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் உரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சர வையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.