• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனி கங்கைக்கு மேல் புதிய பாலமொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- களனி கங்கைக்கு மேல் புதிய பாலமொன்றை நிருமாணிப்பதற்கான கருத்திட்டத்தின் கீழ் களனி கங்கைக்கு குறுக்காக 380 மீற்றர் நீளம் கொண்ட ஆறு (6) சாலை பாதைகளைக் கொண்ட பாலமொன்றையும் நுழைவு வீதிகளையும் நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 9,896 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.