• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பம்பஹின்ன நீர்வழங்கல் திட்டத்தை நிருமாணித்தல்
- இரத்தினபுரி மாவட்டத்தின் பம்பஹின்ன, முத்தெட்டுவேகம, புவக்கஹவெல, கரகஸ்தலாவ, கின்சிகுணே மற்றும் கும்பல்கம ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கும் சப்பிரகமுவ பல்கலைக்கழகத்திற்கும் பாதுகாப்பான குழாய் குடிநீர் வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் பம்பஹின்ன நீர்வழங்கல் திட்டத்தின் நிருமாணிப்பு ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 1,019.47 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.