• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வழக்குத் தீர்ப்பின் அல்லது இறுதி தீர்ப்பின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியொன்றை வழக்கின் ஒவ்வொரு தரப்பினருக்கும் கட்டணங்களின்றி வழங்குதல்
- வழக்குத் தீர்ப்பின் அல்லது இறுதி தீர்ப்பின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியொன்று கட்டணம் அறவிட்டுக் கொண்டதன் பின்னர், வழக்கின் ஒவ்வொரு தரப்பினருக்கும் வழங்க முடியுமென்னும் ஏற்பாடுகள் குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை மற்றும் குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், வழக்குத் தீர்ப்பின் அல்லது இறுதி தீர்ப்பின் வௌிப்படுத்தல்களை பெற்றுக் கொள்வதற்கு சில வழக்குகளின் உரிய தரப்பினர்களுக்கு பணம் இல்லையென அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், நீதி நிருவாகத்தை உறுதிப்படுத்துவதற்கும் நீதி முறைமையின் மேம்பாட்டுக்கும் வழக்கு நடவடிக்கைகளின் ஒவ்வொரு தரப்பிற்கும் வழக்குத் தீர்ப்பின் அல்லது இறுதி தீர்ப்பின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியொன்றை கட்டணமின்றி வழங்குவதற்கு இயலுமாகும் வகையிலான ஏற்பாடுகளை உள்ளடக்கி குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை மற்றும் குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை ஆகியவற்றைத் திருத்தும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.