• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஓசோன் நேய தேயிலை இலச்சினையை இலங்கை கிரிக்கட் குழுவின் விளையாட்டு ஆடையில் பதித்தல்
- ஓசோன் படலத்திற்கு சேதம் விளைவிக்கும் Methyl Bromide அல்லது Bromo - methane இரசாயன பொருட் பாவனையை மட்டுபடுத்த வேண்டுமென ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான மொன்றியல் சமவாயத்தினால் 1992 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மாற்று தொழினுட்ப வழிமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் முக்கியமாக தேயிலை செய்கையில் களைக் கொல்லிகளாக பயன்படுத்தப்பட்ட இந்த இரசாயனப் பொருட்களை முழுமையாக பாவனையிலிருந்து நீக்குவதற்கு இலங்கை வெற்றிகண்டுள்ளதோடு, இது சருவதேசத்தினால் மெச்சப்பட்டும் உள்ளது.

இந்த வெற்றியினைக் குறிக்கும் முகமாக இலங்கை தேயிலை சபையினால் "ஓசோன் நேய தேயிலை இலச்சினை" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஓசோன் நேய தேயிலை உற்பத்தி செய்யும் நாடொன்றாக இலங்கை தேயிலையை சருவதேச சந்தையில் மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கிரிக்கட் குழுவின் உத்தியோகபூர்வ ஆடையில் இந்த இலச்சினையை பதிப்பது சம்பந்தமாக உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.