• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மிளகு விலை குறைவடைதல்
- இந்நாட்களில் சருவதேச சந்தையிலும் உள்நாட்டு சந்தையிலும் மிளகு விலை குறைவடைந்துள்ளதன் காரணமாக மிளகு செய்கையாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர். மிளகு செய்கையாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் வருமான பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் இது தொடர்பிலான விடயங்களை பரிசீலனை செய்து அமைச்சரவைக்கு தாமதமின்றி அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் தலைமையில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர், திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர், கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர், நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் ஆகியோர்களைக் கொண்ட அமைச்சர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.