• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாநகர கருத்திட்ட அலுவலகங்களின் ஊடாக மேற்குப் பிராந்திய மாநகர ஆரம்ப பணிகளை நடைமுறைப்படுத்துதல்
- மேற்குப் பிராந்திய மாநகர திட்டமிடல் கருத்திட்ட அலுவலகமானது 2015 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டதோடு, மாநகர ஆரம்ப பணிகளின் கீழ் தயாரிக்கப்பட்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மேற்கு பிராந்திய மாநகர அதிகாரசபையானது தாபிக்கப்படும் வரை 11 கருத்திட்ட அலுவலகங்களை தாபிப்பதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரதான கருத்திட்டத்தின் மூலமும் குறித்த கருத்திட்ட அலுவலகங்களின் மூலமும் மேற்கொள்ளப்படும் பணிகள் இரட்டிப்பாவதை தடுக்கும் நோக்கில் மேற்குப் பிராந்திய மாநகர திட்டமிடல் கருத்திட்டத்தின் செயற்பாட்டு பணிகளை முடிவுறுத்துவதற்கும் ஏனைய கருத்திட்ட அலுவலகங்கள் முறையாக செயற்படுவதனை உறுதிப்படுத்துவதற்கும் குறித்த கருத்திட்டங்களை பின்வருமாறு அவற்றின் உரிய பெயர்களைக் கொண்டு மீளப் பெயரிடும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* மேற்குப் பிராந்திய விமான நகர அபிவிருத்திக் கருத்திட்டம்.

* மேற்கு கரையோர நகர அபிவிருத்திக் கருத்திட்டம்.

* மேற்குப் பிராந்திய பெருந்தோட்டக் கைத்தொழில் நகர அபிவிருத்தி கருத்திட்டம்.

* மேற்குப் பிராந்திய சுற்றுலா நகர அபிவிருத்தி கருத்திட்டம்.

* மேற்குப் பிராந்திய தொழினுட்ப நகர அபிவிருத்தி கருத்திட்டம்.

* மேற்குப் பிராந்திய நிருவாக நகர அபிவிருத்தி கருத்திட்டம்.

* மேற்குப் பிராந்திய பசுமை நகர அபிவிருத்தி கருத்திட்டம்.

* மேற்குப் பிராந்திய போக்குவரத்து நகர அபிவிருத்தி கருத்திட்டம்.

* மேற்குப் பிராந்திய திண்மக் கழிவு முகாமைத்துவ கருத்திட்டம்.

* மேற்குப் பிராந்திய கூட்டு சமூக அபிவிருத்தி கருத்திட்டம்.

* மேற்குப் பிராந்திய திட்டமிடல் கருத்திட்டம்.