• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தாபித்தல்
- வட இந்திய இசையை உள்நாட்டு வடிவங்களுக்கு உட்படுத்தி எமது நாட்டு இசையுடன் கலந்து உள்நாட்டு அடையாளங்களைக் கொண்ட சங்கீத வழிமுறையொன்றை உருவாக்குவதற்கு முன்னோடியாகவிருந்த கலாநிதி பண்டிதர் அமரதேவ அவர்களினால் கட்டியெழுப்பப்பட்ட சங்கீத பயிற்சி மற்றும் படைப்புகள் நாட்டின் தேசிய மரபுரிமையாக கருதப்படலாம். இந்த மரபுரிமையை எதிர்கால சந்ததியினரும் அறிந்து கொள்வதற்கு இயலுமாகும் வகையில் அதனை பாதுகாக்கும் நோக்கில் சங்கீத துறைசார்ந்த சகல பிரிவுகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட "அமரதேவ அசப்புவ" என்பதை தாபிப்பதற்கு அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையமாக பாராளுமன்ற சட்டத்தின் மூலம் கூட்டிணைத்து "அமரதேவ அசப்புவ" என்பதை தாபிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.