• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுகாதாரதுறை சார்ந்த புதிய அபிவிருத்தி கருத்திட்டங்கள்
- அரசாங்கத்தினால் நீண்டகாலமாக சுகாதாரதுறையின்பால் செய்யப்பட்ட முதலீடுகள் இலங்கையில் சுகாதார சேவை விருத்தியடைந்த மட்டத்திற்கு கொண்டுவந்துள்ளதோடு, தற்போது அண்ணளவாக தடுப்பு சுகாதார சேவை பணிகள் 100 சதவீதமும் தங்கியிருந்து சிகிச்சைபெறும் நோயாளர்கள் சிகிச்சை சேவை 90%-95% சதவீதம் வரையும் வௌிநோயாளர் சிகிச்சை நடவடிக்கைகளில் 40%-50% சதவீதமும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன. அபிவிருத்தி யடைந்த நாடுகளுக்கு சமமாக சுகாதார சுட்டெண்கள் பேணப்பட்டு வருகின்றதோடு, சுகாதாரசேவைகளை இலவசமாக வழங்குவதை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி நாட்டு மக்களை ஆரோக்கியம் மிக்கவர்களாக்கும் நோக்கில் நாட்டின் சுகாதார சேவைகளை மேலும் விருத்தி செய்யவேண்டியுள்ளது.

இதற்கமைவாக, பௌதிக மற்றும் மனிதவளங்கள் உச்சமட்டத்தில் பிரிந்து செல்வதை உறுதிப்படுத்தி பிரதான வைத்தியசாலைகள் சிலவற்றில் நிலவும் கூடுதல் இடநெருக்கடியைக் குறைப்பதற்கு ஆரம்ப மருத்துவசாலைகளின் வசதிகளை விருத்தி செய்வதற்கும், சிறுவர், புற்றுநோய், சத்திரசிகிச்சை, தாய், குழந்தை பிறப்பு, வாய் சுகாதாரம் போன்ற காவறைத் தொகுதிகள், ஆய்வுகூடங்கள், மருந்து களஞ்சியங்கள் மற்றும் சிகிச்சை கட்டடங்கள் போன்றவற்றை தூர இடங்களிலுள்ள வைத்தியாசலைகளில் நிருமாணிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு இலகுவாக செல்லக்கூடிய விதத்தில் நிபுணத்துவ சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக இனங்காணப்பட்டுள்ள அண்ணளவாக 28,000 மில்லியன் ரூபாவைக் கொண்ட பல்வேறுபட்ட கருத்திட்டங்களை 2018 ஆம் ஆண்டில் ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்காக நிதி பெற்றுக் கொள்ளும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.