• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக் குடியமர்த்தும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்கள் மற்றும் இந்தக் குடும்பங்களுக்கு வீடுகளை நிருமாணிக்கும் போது பயன்படுத்த வேண்டிய வீட்டு வடிவமைப்புத் திட்டங்கள்
- 2017 மே மாதம் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்தவர்களை மீள குடியமர்த்தும் போது உரிய நிறுவனங்களினால் பின்பற்றப்பட வேண்டிய "வழிகாட்டல்கள்" மற்றும் நிருமாணிக்கப்படும் வீடுகளுக்காக பயன்படுத்த வேண்டிய "வீட்டு வடிவமைப்புகள்" தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் குறித்த வழிகாட்டலகள் மற்றும் வீட்டு வடிவமைப்புகளுக்கு அமைவாக, வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள குடியமர்த்தும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது