• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்தள ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தின் தொழிற்பாடுகளை அரசாங்க - தனியார் கூட்டு தொழில்முயற்சி என்னும் வடிவத்தில் நடைமுறைபடுத்துவது சம்பந்தமாக பரிசீலனை செய்தல்
- தற்போது நட்டத்தில் நடாத்தி செல்லப்படும் மத்தள ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தின் 2016 திசெம்பர் 31 ஆம் திகதியன்றுக்கான திரண்ட நட்டமானது 112.9 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் (15,600 மில்லியன் ரூபா) ஆகும். இந்த நிலைமையின் கீழ் இந்த விமான நிலையத்தின் தொழிற்பாடுகளை நட்டத்தில் தொடர்ந்தும் நடாத்திச் செல்வது அரசாங்கத்திற்கு பாரிய செலவு பளுவொன்றாகும். ஆதலால், இந்த விமான நிலையத்தை அரசாங்க - தனியார் கூட்டு தொழில்முயற்சி என்னும் வடிவத்தின் கீழ் ஆகக்கூடிய வருமானத்தை ஈட்டும் விமானநிலையமொன்றாக மாற்றும் நோக்கில் இந்த விமான நிலையத்தின் விமான சேவைகள் சம்பந்தமான தொழில்முயற்சிகள் சார்பில் முதலீட்டாளர்களிடமிருந்து பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளன. ஆயினும், விமான நிலையத்தின் மொத்த தொழிற்பாட்டு, முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு என்பவற்றைத் தழுவும் பிரேரிப்புகள் எதும் முன்வைக்கப்படவில்லை.

மத்தள ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தின் வர்ததக விமானசேவைகள், விமானங்களின் பராமரிப்பு, திருத்த வேலைகள், விமான கல்லூரி என்பன மாத்திரமன்றி இதன் தொழிற்பாடு, முகாமைத்துவம், பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளின்பால் கவனம் செலுத்தி கூட்டு தொழில்முயற்சியொன்றை ஆரம்பிப்பதற்காக இந்திய அரசாங்கத்தினால் பிரேரிப்பொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இந்த பிரேரிப்புகள் சம்பந்தமாக மேலும் ஆராயும் பொருட்டு அமைச்சுக்களின் சில சிரேட்ட செயலாளர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.