• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வாகனம் சார்ந்த குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை திருத்துதல்
- வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பாரிய வாகன விபத்துக்களுக்கு பெருமளவில் காரணமாய் அமையும் வீதி ஒழுங்குவிதிகளை மீறும் 07 குற்றங்களை இனங்கண்டு குறித்த இந்த குற்றங்களுக்காக அறவிடப்படும் ஆகக்குறைந்த தண்டப்பணத்தை 25,000/- ரூபா வரை அதிகரிப்பதற்கு 2016 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது. ஆயினும், இது சம்பந்தமாக பேருந்து சங்கங்களிலிருந்தும் முற்சக்கர வண்டி சங்கங்களிலிருந்தும் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிப்பது சம்பந்தமாக ஆராய்வதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டதோடு, இந்த குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பின்வரும் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* பின்வரும் வாகன குற்றங்களுக்காக அறவிடப்படும் ஆகக்குறைந்த தண்ட பணத்தை 25,000/- ரூபா வரை அதிகரித்தல்:

- செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரமொன்று இல்லாமல் வாகனங்களை செலுத்துதல்.

- சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவரை பணிக்கமர்த்துதல்.

- மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவனையின் பின்னர் வாகனங்களை செலுத்துதல்.

- புகையிரத பாதையினுள் கவனமற்ற விதத்தில் வாகனமொன்றை உட்செலுத்துதல்.

- செல்லுபடியாகும் காப்புறுதி காப்பீடு இல்லாமல் வாகனங்களை செலுத்துதல்.

* பின்வரும் வாகன குற்றங்களுக்காக தற்போது அறவிடப்படும் ஆகக்குறைந்த தண்டப்பணத்தை திருத்துதல்:

- அதிவேகமாக வாகனங்களை செலுத்துதல்

(உரிய உச்ச வேகத்தை விஞ்சி 20% வரை அதிவேகத்தில் வாகனங்களை செலுத்துவதன் சார்பில் 3,000/- ரூபாவும்; உரிய உச்ச வேகத்தை விஞ்சி 20% கூடுதலாகவும் 30% குறைவாகவும் அதிவேகத்தில் வாகனங்களை செலுத்துவதன் சார்பில் 5,000/- ரூபாவும்; உரிய உச்ச வேகத்தை விஞ்சி 30% கூடுதலாகவும் 50% குறைவாகவும் அதிவேகத்தில் வாகனங்களை செலுத்துவதன் சார்பில் 10,000/- ரூபாவும்; உரிய உச்ச வேகத்தை விஞ்சி 50% கூடுதலாக அதிவேகத்தில் வாகனங்களை செலுத்துவதன் சார்பில் 15,000/- ரூபாவும் குறித்த அந்த இடத்திலேயே தண்டப்பணமாக விதித்துரைத்தல்)

- இடது பக்கமாக வாகனங்களை முந்திச் செல்லுதல்.

(இந்த குற்றத்திற்காக ஆகக்குறைந்த குறித்த இடத்திலேயே விதித்துரைக்கப்படும் தண்டப்பணமானது 2,000/- ரூபா வரை அதிகரிக்கப்படும்)

- பிற ஆட்களின்பால் கவனம் செலுத்தாது அல்லது உண்மையான கவனமின்றி வாகனங்களை செலுத்துதல்

(இந்த குற்றத்திற்காக 10,000/- ரூபாவைக் கொண்ட ஆகக்குறைந்த தண்டப்பணம் விதித்துரைக்கப்படும்)

- உரிய வயதினை விட குறைந்த வயதினை உடையவர்களினால் வாகனங்களை செலுத்துதல்.

(இந்த குற்றத்திற்காக தற்போது நடைமுறையிலுள்ள ஆகக்குறைந்த தண்டப்பணத்தை 5,000/- ரூபாவிலிருந்து 30,000/- ரூபா வரை அதிகரித்தல்)

- மோட்டார் வாகன சட்டத்தில் வௌிப்படுத்தக்கூடாத தண்டனைகள் இல்லாத ஏதேனும் குற்றங்களுக்காக ஏற்புடைத்தாக்கிக் கொள்ளப்படும் பொதுத் தண்டணையின் கீழ் அறவிடப்படும் ஆகக்குறைந்த தண்டப்பணத்தை 2,500/- ரூபா வரை அதிகரித்தல்.

* செல்லிடத் தொலைபேசியை பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை செலுத்துதல் சம்பந்தமாக 2,000/- ரூபாவை குறித்த அந்த இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணமாக குறித்துரைத்தல்.

* சாரதிகள் புள்ளிமுறையின் நடைமுறைப்படுத்தலை துரிதப்படுத்தல்.

வாகன விபத்துக்கள் பரவலாக நிகழும் இடங்களுக்கு அருகாமையில் CCTV கமராக்களைப் பொருத்தி இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்.

* வாகனங்கள் சார்ந்த குற்றங்கள் தொடர்பில் குறித்த இடத்தில் விதித்துரைக்கப்படும் தண்டப்பணத்தினை அறவிடுவதற்காக மின்னணு கொடுப்பனவு வசதிகளை பயன்படுத்தும் பிரேரிப்பை துரிதமாக நடைமுறைப்படுத்துதல்.

* அதிவேக பாதைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் வேகக்கட்டுப்பாட்டு பலகைகளை முறையாக காட்சிப்படுத்துதல்.

* இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் வசுவண்டிகள் போக்குவரத்திற்குரியதாக கூட்டு கால அட்டவணைகள் அல்லது பொருத்தமான வேலைத்திட்டமொன்றை துரிதமாக நடைமுறைப்படுத்துதல்.

* முச்சக்கரவண்டிகள் மற்றும் பாடசாலை மாணவர்களை கொண்டு செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்கள் போன்றவற்றை ஒழுங்குறுத்தும் பொருட்டு ஒழுங்குறுத்தல் நிறுவனமொன்றை நிறுவுதல்.

* பயணிகளின் பாதுகாப்பினை வழங்கும் வினைத்திறன் மிக்க போக்குவரத்து சேவையொன்றைத் தாபித்தல்.

* வாகன சட்டங்களை நடைமுறைப்படுத்தும் சில உத்தியோகத்தர்களினால் செய்யக்கூடிய பல்வேறுபட்ட முறைகேடுகளை குறைப்பதற்காகவும் சட்ட அமுலாக்கத்தின் வௌிப்படத்தன்மையை ஏற்படுத்துவதற்குமாக நவீன தொழினுட்ப கருவிகளைப் பயன்படுத்துதல்.