• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகம்
- அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளின் மூலம் கையளிக்கப்பட்டுள்ள அரசாங்க நிதி தொடர்பிலான தத்துவத்தை பாராளுமன்றத்தினால் பயனுள்ள விதத்தில் நடைமுறைப்படுத்தும் போது பாராளுமன்றத்தின் கௌரவ உறுப்பினர்களுக்கு வரவுசெலவுத்திட்ட செயற்பாடு, பொருளாதார கொள்கைகள் மற்றும் நிதி பிரேரிப்புகள் போன்றவை தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான நன்மை தீமைகளை அறிந்து கொள்ளும் சேவைகளையும் வசதிகளையும் வழங்கும் முக்கிய நோக்கில் பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை தாபிக்கும் பொருட்டு சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.