• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாகாண சபைகளின் தேர்தல்களை மீள் அட்டவணைப்படுத்தல்
- சகல மாகாணசபைகளுக்கும் உரிய தேர்தலை ஒரே நாளில் நடாத்துவதற்கு இயலுமாகும் வகையில் அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளையும் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் இதற்குரிய ஏற்பாடுகளையும் திருத்தும் பொருட்டு அமைச்சரவையினால் 2017‑07‑25 ஆம் திகதியன்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சட்டவரைநரினால் வரையப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்த சட்டமூலத்தையும் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் (திருத்த) சட்டமூலத்தையும் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன்பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.