• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வௌ்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் சேதமுற்ற பிரதேசங்களின் புனர்நிருமாணம் மீள்நிருமாணிப்பு வேலைகளை துரிதப்படுத்துதல்
-இந்த ஆண்டு மே மாதத்தில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக மாத்தறை, காலி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் அடங்கலாக பல பிரதேசங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் அன்றாட வாழ்க்கையை முழுமையாக பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு மீள்நிருமாணிப்பு உட்பட ஏனைய வசதிகளை வழங்குவதனை துரிதமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்கமைவாக, துரிதமாக செய்யப்பட வேண்டிய மீள்நிருமாணிப்பு பணிகளுக்குரிய 50 மில்லியன் ரூபாவை விஞ்சாத ஒப்பந்தங்களை உரிய பொறியியல் மதிப்பீடுகளின் மீதும் கொள்வனவு குழுக்களின் அங்கீகாரத்தின் மீதும் நிருமாணிப்புக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கும் அதிகாரத்தை மாவட்ட செயலாளர்களுக்கு கையளிப்பதற்கும் நடுத்தவணைக்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் செய்யப்பட வேண்டிய ஏனைய சலுகைகளை செய்யும் பணிகளை உரிய அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகள் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.