• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காற்று மின்வலுப் பிறப்பாக்க கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு நிதியுதவி பெற்றுக் கொள்ளல்
- தூய வலுசக்தி உற்பத்தி மற்றும் மின்சார விநியோகத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் செயற்படுத்தப்படும் காற்று மின்வலு பிறப்பாக கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான 256.7 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட செலவில் 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை சலுகை நிபந்தனைகளின் கீழ் வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த நிதியை பெற்றுக் கொள்வதற்கு உரிய கடன் உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.