• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலகு புகையிரத பாதை கருத்திட்டம் சார்பில் காணி சுவீகரித்தலும் இதனால் பாதிக்கப்படும் தரப்பினர்களுக்கு நட்டஈடு செலுத்துதலும்
- கொழும்பு நகர பிரதேசத்தின் வாகன நெரிசலை குறைத்து பொது போக்குவரத்து முறைமையை புனரமைப்பதற்காக இலகு புகையிரத பாதை முறைமையொன்றை நிருமாணிக்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதன்கீழ் நிருமாணிக்கப்படும் முதலாவது இலகு புகையிரத பாதைகள் இரண்டினை நிருமாணிப்பது சம்பந்தமான சாத்திய தகவாய்வு தற்போது செய்யப்பட்டு வருகின்றது. இந்த கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு இதற்குத் தேவையான காணிகளை இந்த சாத்தியத்தகவாய்வின் மூலம் இனங்காணப்பட்டவுடன் சுவீகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்படுதல் வேண்டும்.

இதற்கமைவாக, இந்த கருத்திட்டத்தின் மூலம் பாதிக்கப்படும் தரப்புகளுக்கு மிக நியாயமான நட்டஈடு தொகையொன்றை வழங்குவதன் மூலம் தேவையான காணிகள் சுவீகரித்தலை தாமதமின்றி மேற்கொள்ளும் நோக்கில், இதற்காக காணி கொள்ளல், மீள்குடியமர்த்தல் குழு (LARC), காணி கொள்ளல், மீள் குடியமர்த்தல் விசேட குழு (SUPER LARC) நடவடிக்கைமுறையை பின்பற்றும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.