• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 ஆம் ஆண்டில் இலவசமாக விநியோகிப்பதற்கு தேவையான பாடசாலை பாடநூல்கள் அச்சிடுதல்
- 2018 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் இலவசமாக விநியோகிப்பதற்கு தேவையான 285 வகை பாடசாலை பாடநூல்களின் 18.53 மில்லியன் பிரதிகளை அச்சிடுவதற்கு உள்ளூர் அச்சாளர்களிடமிருந்து திறந்த கேள்வி கோரப்பட்டுள்ளது. ஆகக்குறைந்த விலை, கேள்விதாரரின் அச்சிடல் ஆற்றல், உரிய காலத்திற்கு விநியோகிக்கும் ஆற்றல் போன்ற விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள 25 நிறுவனங்களைக் கொண்டு உரிய பாடசாலை பாடநூல்களை அச்சிட்டுக் கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.