• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Hilton ஹோட்டலின் உரிமையை மீள் கட்டமைத்தல்
- பூரணமான அரசுடமையான Hotel Developers (Lanka) PLC தனியார் கம்பனியின் ஊடாக நிருவகிக்கப்பட்டு வரும் இலங்கை Hilton ஹோட்டல், அரசாங்கத்தின் உரிமையை குறைத்துக் கொண்டு தனியார் துறையின் முதலீட்டுக்காக இடமளிக்கக்கூடிய அரசாங்கத்திற்கு திறமுறை ரீதியில் முக்கியத்துவமற்ற சொத்தொன்றாக 2016 வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகள் மூலம் இனங்காணப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலின் எதிர்கால அபிவிருத்தி பணிகளுக்குத் தேவையான முதலீடுகளை செய்வதற்காக தனியார்துறையைச் சேர்ந்த முதலீட்டாளர்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தனியார்துறையின் முதலீடுகள் ஊக்குவிக்கப்படுவதோடு, அரசாங்கத்திற்குச் சொந்தமான நிதி வேறு சமூக மற்றும் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நோக்கங்களுக்கு பயன்படுத்துவதற்கு இயலுமாகும்.

இதற்கமைவாக, Hotel Developers (Lanka) PLC தனியார் கம்பனியின் பங்குகளிலிருந்து 51 சதவீதத்தை பொருத்தமான முதலீட்டாளர் ஒருவருக்கு கையளிக்கும் பொருட்டு கொழும்பு பங்கு பரிமாற்றலில் விசேட சபையில் விலை முன்வைப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கும் கம்பனியின் பங்குகளிலிருந்து 4 சதவீதம் அதன் ஊழியர்களுக்கு ஒதுக்குவதற்கும் மீதி 45 சதவீத பங்குகளை கொழும்பு பங்குச் சந்தையில் நிலையான விலைக்கு விற்பனை செய்வதற்குமாக அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.