• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Grand Hyatt ஹோட்டலின் உரிமையை மீள் கட்டமைத்தல்
- அரசாங்க நிருவாகத்தின் கீழ் நிலவும் அரசாங்க தொழில்முயற்சிகளில் போட்டிகரமான நிலைமையையும் வினைத்திறனையும் விருத்தி செய்வதன் மூலம் நிலையானதும் முழுமையானதுமான துரித பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்தாசை நல்குவது அரசாங்கத்தின் கொள்கையாகும். இதற்கமைவாக, திறமுறை ரீதியில் முக்கியமற்ற தெரிவுசெய்யப்பட்ட சொத்துக்கள் சிலவற்றின் உரிமையை மீள்கட்டமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், லிற்றோ கேஸ் கம்பனி மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் போன்ற அரசாங்க நிறுவனங்களினால் உரிமை வகிக்கப்படும் "Canwill holdings (pvt) Ltd.,” கம்பனியினால் நிருமாணிக்கப்பட்டு வரும் Grand Hyatt ஹோட்டலின் கருத்திட்டத்திற்குச் சொந்தமான வளங்களை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு மேலும் பாரிய முதலீடு செய்யவேண்டியுள்ளது. அரசாங்கத்தின் வேறு முக்கிய தேவைகள் நிலவுகின்றமையினாலும் இலங்கையர்கள் சிறு அளவினருக்கு மாத்திரம் சேவை வழங்கும் இத்தகைய சொகுசு ஹோட்டல் கருத்திட்டமொன்று சார்பிலும் மேலும் அரசாங்க நிறுவனங்களுக்கு நிதி செலவிடுவது பொருத்தமற்றதென்பதனாலும் இதன் சார்பில் தனியார் முதலீடுகளை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைவாக, Grand Hyatt ஹோட்டல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் "Canwill holdings (pvt) Ltd.,“ கம்பனியின் அரசாங்கத்திற்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு பொருத்தமான தனியார் முதலீட்டாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு கொள்வனவுக் குழுவொன்றையும் தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றையும் நியமிக்கும் பொருட்டு அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.