• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு அத்தியாவசியமான மருந்துகளை கொள்வனவு செய்தல்
- சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தொன்றான Human Albumin கரைசல் BP/PH Eur 20% மில்லி லீற்றர் 50 புட்டிகள் 80,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 2.19 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.