• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அங்குனகொலபெலஸ்ஸ நீர்வழங்கல் கருத்திட்டத்தின் பிரதான பம்பியகத்துக்குத் தேவையான உதிரிப்பாகங்களையும் DI குழாய்களையும் வழங்கி விநியோகிப்பதற்கான ஒப்பந்தம்
- அங்குனகொலபெலஸ்ஸ, எரமினியாய பிரதேசத்தில் தாபிக்கப்பட்ட புதிய சிறைச்சாலைகள் கட்டடத்தொகுதிக்கும் அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 2,000 குடும்பங்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் நோக்கில் செயற்படுத்தப்படும் அங்குனகொலபெலஸ்ஸ நீர்வழங்கல் கருத்திட்டத்தின் பிரதான பம்பியகத்துக்குத் தேவையான உதிரிப்பாகங்களையும் DI குழாய்களையும் வழங்கி விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 166.74 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.