2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிருமாணிக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை ஒப்படைத்தல் - யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழினுட்பம் மற்றும் உயிரியல் முறைமை தொழினுட்பம் ஆகிய பிரிவுகளுக்கு புதிய கட்டடமொன்றை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தையும் இந்த பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்திற்கு எட்டு மாடிகளைக் கொண்ட சிகிச்சைக் கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தையும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் முறையே 424.43 மில்லியன் ரூபாவுக்கும் 564.67 மில்லியன் ரூபாவுக்கும் வழங்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|