• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கான புதிய வர்த்தக கொள்கை
- முறையாகவும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வழிமுறையொன்றுக்கும் அமைவாக தயாரிக்கப்பட்ட தௌிவான தொலைநோக்குடன் கூடிய வர்த்தக கொள்கையொன்று இல்லாமையினால் காலத்திற்கு காலம் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை விதித்தல் மற்றும் பயன்படுத்துதல் இலங்கையின் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதன்பால் பிரதிகூலமான விதத்தில் தாக்கத்தை செலுத்தியுள்ளது. ஆதலால், ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைக்கு முன்னுரிமை வழங்கி புதிய வர்த்தக கொள்கையொன்றை ஏற்படுத்திக் கொள்வது தேவையொன்றாகும். இதற்கமைவாக, உரிய துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றின் மூலம் இலங்கையில் புதிய வர்த்தக கொள்கையின் ஆரம்ப வரைவானது வரையப்பட்டுள்ளதோடு, போட்டிகரமான நிலையை அதிகரித்தல், சந்தை வாய்ப்பினை விரிவுபடுத்திக் கொள்ளல், பொருளாதார சமநிலைக்கான கொள்கை மற்றும் நிறுவன கட்டமைப்பை உருவாக்குதல், பாதிக்கப்படக்கூடிய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு போட்டிகரமான நிலைக்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் வர்த்தக நலன்கள் சகல தரப்பினர்களுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளல் போன்ற பிரதான நோக்கங்களின் பால் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, உத்தேச வர்த்தக கொள்கையை ஏற்புடைத்தாக்கிக் கொள்வதற்கும் இதிலுள்ள கொள்கை நடவடிக்கைகளை உரிய சகல நிறுவனங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தும் பொருட்டும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.