• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புறத்தோலுடனான மரமுந்திரிகை இறக்குமதி
- நாட்டின் வருடாந்த புறத்தோலுடனான மரமுந்திரிகை கேள்வியானது 20,000 மெற்றிக் தொன்களாக இருந்தபோதிலும் ஆண்டொன்றில் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் புறத்தோலுடனான மரமுந்திரிகை 10,000 மெற்றிக் தொன்னுக்கும் 12,000 மெற்றிக் தொனுக்கும் இடைப்பட்ட அளவாகும். உள்நாட்டு சந்தையில் நிலவும் புறத்தோலுடனான மரமுந்திரிகை பற்றாக்குறை மரமுந்திரிகை பதனிடல் பணிகளில் ஈடுபட்டுள்ள பெருமளவிலான குடும்பங்களின் வாழ்வாதாரத்தின்பால் பிரதிகூலமான விதத்தில் பாதித்தது. இதற்கமைவாக, உள்நாட்டு சந்தையில் புறத்தோலுடனான மரமுந்திரிகை தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களும் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களும் இணைந்து முன்மொழிந்த பின்வரும் வழிமுறையானது அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* தாவர பாதுகாப்பு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கும் உரிய ஒழுங்குவிதிகளுக்கும் அமைவாக தொற்றுதடைகாப்பு நியதிகளுக்கு இயைந்தொழுகி, அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சினால் கமத்தொழில் அமைச்சுக்கு செய்யப்படும் சிபாரிசின் பிரகாரம் கமத்தொழில் பணிப்பாளர் அதிபதியினால் வழங்கப்படும் உரிமப்பத்திரமொன்றின் மீது உள்நாட்டு சந்தைக்காக வருடாந்தம் 6,000 மெற்றுக் தொன்னும் ஏற்றுமதி நோக்கத்திற்காக தற்காலிக இறக்குமதி, ஏற்றுமதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெறுமதி சேர்க்கப்பட்டு மீள் ஏற்றுமதிக்காக வருடாந்தம் 15,000 மெற்றிக் தொன்னுமாக புறத்தோலுடனான மரமுந்திரிகை இறக்குமதிக்கு இடமளித்தல்.

* TIEP திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் புறத்தோலுடனான மரமுந்திரிகை கமத்தொழில் திணைக்களத்தினால் பொருத்தமானதென இனங்காணப்படும் துறைமுகத்தில் அல்லது அதற்கண்மித்த இடமொன்றில் பெறுமதி சேர்க்கப்பட்ட செயற்பாட்டிற்கு உட்படுத்துவதற்கும் அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முழு அளவையும் மீள் ஏற்றுமதி செய்யப்படுவதனை சுங்கத் திணைக்களத்தினால் உறுதிப்படுத்துதல்.

* 2020 ஆம் ஆண்டளவில் மரமுந்திரிகை உற்பத்தியாளர்கள் தன்னிறைவை அடைவதற்கு மரமுந்திரிகை செய்கைக்கான துரித நிகழ்ச்சித்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்துதல்.