• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறமுறை நகர அபிவிருத்தி கருத்திட்டத்திற்கான மீள் குடியமர்த்தல் கொள்கை கட்டமைப்பைத் தாபித்தல்
- உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திறமுறை நகர அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு காணி சுவீகரிப்பதன் காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு தயாரிக்கப்பட்ட சமூக முகாமைத்துவ கட்டமைப்பு, உரிய புவியியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார காரணிகளின்பால் விசேட கவனம் செலுத்தி விருத்தி செய்யப்படும் இதற்கமைவாக, திறமுறை நகர அபிவிருத்தி கருத்திட்டம் செயற்படுத்தப்படும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகள் காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு அவ்வாறு விருத்தி செய்யப்பட்ட மீள் குடியமர்த்தல் கொள்கை கட்டமைப்பை ஏற்புடைத்தாக்கி கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.