• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் துப்புரவேற்பாடு தொடர்பிலான தெற்காசிய மாநாட்டிற்கான பிராந்திய செயலகமொன்றைத் தாபித்தல்
- துப்பரவேற்பாடு தொடர்பிலான விடயங்கள் கலந்துரையாடப்படும் மேடையொன்றாக இரண்டு வருடங்களுக்கு ஒருதடவை சார்க் அமைப்பு நாடுகளுக்கிடையில் இந்த மாநாடு நடாத்தப்படும். துப்பரவேற்பாடு தொடர்பிலான பிரச்சினைகளை தீர்க்கும் போது தேவையான அறிவு மற்றும் அனுபவம் தெற்காசிய நாடுகளுக்கிடையில் பகிர்ந்து கொள்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்யும் நோக்கில் இலங்கையில் துப்புரவேற்பாடு தொடர்பிலான தெற்காசிய மாநாட்டிற்கான பிராந்திய செயலகமொன்றைத் தாபிக்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.