• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வனசீவராசிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக காற்றழுத்த ஆயுதங்களின் பாவனையை ஒழுங்குறுத்துதல்
- சில வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக நாட்டில் பல்வேறுபட்ட பிரதேசங்களில் வன விலங்குகளினால் செய்யப்படும் பயிர்ச்செய்கைகளுக்கான சேதம் அதிகரித்துள்ளதோடு, அத்தகைய விலங்குகளிலிருந்து குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்படுத்தும் இடையூறுகள் அதிகரித்துள்ளன. அடுத்து இத்தகைய விலங்கினங்களிடமிருந்து பயிர்ச்செய்கைகளைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் காற்றழுத்த ஆயுதங்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காகவும் பயன்படுத்துவது சம்பந்தமான முறைபாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பின்வரும் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* தற்போது வன விலங்குகளை துரத்துவதற்கு பயன்படுத்தப்படும் 0.22 mm காற்றழுத்த ரைபலுக்கு பதிலாக குறைந்த வலுகொண்ட காற்றழுத்த ரைபலொன்றை உற்பத்தி செய்வதற்கான சாத்தியம் பற்றி ஆராய்தல் மற்றும் ஒலி மூலம் வன விலங்குகளை துரத்தக்கூடிய புதிய வகையிலான காற்றழுத்த ரைபலொன்றை வடிவமைப்பதற்கு ஊக்குவித்தல்.

* தென்னஞ் செய்கையின் பாதுகாப்புக்காக தற்போது பயன்படுத்தப்படும் 0.22 mm காற்றழுத்த ரைபல் வழங்குதலை முறைப்படுத்துதல்.

* காற்றழுத்த ரைபலை சுடுகலன் கட்டளைச் சட்டத்தில் சேர்த்தல்.

* பயிர்ச்செய்கைகளுக்கு சேதம் விளைவிக்கும் உயர் விருத்தியை காட்டும் விலங்குகளின் விருத்தியை கட்டுப்படுத்துவதற்கு நிபுணத்துவ உதவியைப் பெற்றுக் கொண்டு உயிரியல் விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்தல்.

* பயிர்ச் செய்கைக்கு நன்மை விளைவிக்கும் விலங்குகளின் உயிர்கள் அழிவதற்கு காரணமான கமத்தொழில் இரசாயனங்களின் பாவனையை வரையறுத்தல்.

* வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர்ச்செய்கை சேதங்களைக் குறைப்பதற்கு நவீன விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்துதல்.

* வனவிலங்குகளுக்கு தீங்கு நேராதவாறு அவற்றை பயிர்ச்செய்கைப் பிரதேசங்களிலிருந்து துரத்துவதற்கு முன்னைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய முறைகளை புதிய தொழினுட்பத்தின் ஊடாக விருத்தி செய்து தற்காலத்திற்கு ஏற்றவிதத்தில் பயன்படுத்துதல்.

* வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி வருவதற்கு காரணமாய் அமையும் திறந்த வௌிகளில் கழிவுகளை இடுவதனை குறைத்தல்.

* 'Hakka Patas' உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருள் இறக்குமதியை வரையறுத்தல்.