• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிரத பாதை வலையமைப்பை பராமரித்தலும் விரிவுபடுத்துதலும்
- புகையிரத பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் புகையிரதங்களின் எடை மற்றும் வேகத்திற்கு ஏற்ற விதத்தில் புகையிரத பாலங்களை மேம்படுத்துவதும் புகையிரத பாதை வலையமைப்பை முறையாக பராமரிப்பதும் அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக, கரையோர புகையிரதப்பாதை, வடக்கு புகையிரதப் பாதை மற்றும் மாத்தளை புகையிரதப்பாதை ஆகிய புகையிரதப் பாதைகளில் அமைந்துள்ள 100 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த 07 புகையிரத பாலங்களை புனரமைத்தல், மாகோ, காலி மற்றும் தெமட்டகொட பிரதேசங்களிலுள்ள திருப்பல் மேடைகளை பழுதுபார்த்தல் உட்பட புகையிரத பாதை வலையமைப்பை பராமரித்தல் என்பவற்றுக்குத் தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்களை வழங்கும் பொருட்டு 7.6 மில்லியன் யூரோக்கள் கொண்ட மதிப்பீட்டுச் செலவில் நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்திற்கு ஒஸ்ரிய அரசாங்கத்தினால் வழங்கப்படுவதற்கு உடன்பட்டுள்ள இலகு கடன் சம்பந்தமாக இணக்கப்பேச்சுகளை நடாத்துவதற்கும் உரிய கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.