• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உயர் கல்விக்கான சிறப்பு நிலையமொன்றைத் தாபித்தல்
- உலக சந்தையில் போட்டிகரமாக செயற்படும் போது உயர் முகாமைத்துவத்தைக் கொண்ட நவீன தொழினுட்பம் தொடர்பில் புரிந்துணர்வினைக் கொண்ட தொழில்சார் ஆள்வலுவொன்று இலங்கையிடம் இருப்பது அத்தியாவசியமானதென தெரியவந்துள்ளது. ஆதலால், ஆரம்பத்தில் பொறியியல் பாடசாலையையும் வர்த்தகவியல் பாடசாலையையும் கொண்ட சருவதேச மட்டத்திலான பல்கலைக்கழகமொன்றை தனியார்துறையும் அரசாங்கத்துறையும் இணைந்த கூட்டு நிறுவனமொன்றாக இலங்கையில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க இந்த நோக்கத்திற்காக Massachusetts Institute of Technology நிறுவனம் மற்றும் California Berkeley பல்கலைக்கழகம் போன்ற உலகின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்பையும் தனியார்துறையின் முதலீட்டினையும் பெற்றுக் கொள்தல் அடங்கலாக தேவையான பணிகளை ஏற்பாடு செய்வதற்கு இலாபத்தை நோக்காகக் கொள்ளாத பொறுப்புகள் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றைத் தாபிக்கும் பொருட்டு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.