• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவைப்படும் உபகரணங்களை கொள்வனவு செய்தலும் டெங்கு நோய் பரவுவதனை கட்டுப்படுத்துவதற்கு அவசரமான செயற்பாடுகளும்
- டெங்குநோய் தொற்று நிலைமையை துரிதமாக கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விஞ்ஞாபனமும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விஞ்ஞாபனமும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், டெங்கு நோயாளர்களுக்கு மிக பயனுள்ள வகையில் தீவிர சிகிச்சை சேவையினை வழங்குவதற்கு அத்தியாவசியமானதும், துரிதமாக கொள்வனவு செய்யவேண்டி மருத்து மற்றும் இரசாயனகூட உபகரணங்கள் சிலவற்றை அவசர கொள்வனவுகளாக கருதி கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக, இவற்றுள் உள்நாட்டில் கொள்வனவு செய்யக்கூடிய உபகரணங்களை உடனடியாக கொள்வனவு செய்வதற்கும் மீதி உபகரணங்களை வௌிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களின் ஊடாக கொள்வனவு செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இதன்சார்பில் 300 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கு குறித்தொதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் டெங்கு நோய் மேலும் பரவுவதை கட்டுப்படுத்தும் பொருட்டு பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் கூட அங்கீகாரம் வழங்கப்பட்டது.

(i) தமது அலுவலக மனையிடத்தை டெங்கு நோய் பரவுவதற்கு இடமளிக்காத பிரதேசமாக பேணும் பொருட்டு திணைக்களத் தலைவர்கள் பொறுப்பு சொல்ல வேண்டுமென சனாதிபதியின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை கட்டாயமாக நடைமுறைப்படுத்தல்.

(ii) பெற்றோர்களினதும் மாணவர்களினதும் பங்குபற்றுதலுடன் பாடசாலைகளில் டெங்கு தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சினால் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.

(iii) டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இனங்காண்பதற்கு வீடு வீடாக பரிசோதிப்பதற்கு மேல் மாகாண சபையினால் வௌிக்கள உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, இந்த நடவடிக்கைமுறையை ஏனைய மாகாண சபைகளினாலும் பின்பற்றுதல்.

(iv) டெங்கு நோயை கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றி பொது மக்களுக்கு விழிப்பூட்டுவதற்கு பொருத்தமான குறுகிய வீடியோ நிகழ்ச்சித்திட்டங்களை செவிப்புல நிகழ்ச்சித்திட்டங்களை தயாரித்து விளம்பரப்படுத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.

(v) சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் ஒத்துழைப்புடன் டெங்கு நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சை சேவைகளை வழங்கும் பொருட்டு இலங்கை தரைப்படையைச் சேர்ந்த 2,000 வீரர்களைப் பயிற்றுவித்தல்.

(vi) சுகாதார மருத்துவ உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி அதிகாரசபைகள், பிரதேச செயலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையம் என்பன இணைந்து அந்தந்த பிரதேசங்களில் டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.